ஒருங்கிணைவு (உள்வாங்குதல்) வசதி

ஒருங்கிணைவைப் பள்ளிகளிலும் வேலையிடங்களிலும் காணலாம். மேற்குறிப்பிட்ட வசதிகள் கிடையாதவர்களுக்கு வேறு பலவகையான ஒருங்கிணைவு வசதிகள் உள்ளன.

முதன்மைத் தகவல்கள் மற்றும் சுருக்கமான தகவல்கள்

ஆரம்ப ஆலோசனையின் போது, ​​​​​​​​​​​​INFI தகவல் மையம் புதியவர்களுக்கு அவர்களின் உரிமைகள், கடமைகள் மற்றும் சுவிட்சர்லாந்திலும் அப்பென்செல் ஆஸெர்ஹோடனிலும் வாழ்க்கை குறித்து தெரிவிக்கிறது. கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, சட்ட உரிமைகள் மற்றும் சமூகப் பாதுகாப்பு போன்ற தலைப்புகள் இதில் அடங்கும். குறிப்பான ஒருங்கிணைவுக்குப் பொருத்தமான சேவைகள் மற்றும் தொடர்பு புள்ளிகள் பற்றிய விவரங்களும் வழங்கப்படுகின்றன.

ஆரம்ப ஆலோசனைக்கான சந்திப்பை நீங்கள் இன்னும் திட்டமிடவில்லையா? chancengleichheit@ar.ch ஊடாக அல்லது +41 71 353 64 26 என்ற தொலைபேசி எண்ணின் ஊடாக எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

மேலும், குடிவந்தவர்கள் அன்றாட விஷயங்கள் குறித்து சுருக்கமான தகவல்களை INFI இல் பெற்றுக்கொள்ளலாம்.

என்ன தவறு நடந்தது? chancengleichheit@ar.ch  ஊடாக அல்லது +41 71 353 64 26 என்றதொலைபேசியில் எண்ணின் ஊடாகத் தொடர்பு கொள்ளவும்.

குறிப்பான வசதிகள்

வெளிநாட்டினருக்கு சுவிஸ் சமூகத்தில் ஒன்றிணைந்து தொடர்புகளை ஏற்படுத்த உதவும் ஏராளமான குறிப்பான சேவைகள் உள்ளன. இவற்றில் கலந்துரையாடல் குழுக்கள், ஓய்வு நேர நடவடிக்கைகள், விரிவுரைகள் மற்றும் பாடநெறிகள் அடங்கும். ஒருங்கிணைவுத் தகவல் மையம் (INFI) அல்லது உங்கள் உள்ளூர் நகராட்சி இச்சேவைகள் பற்றிய தகவல்களை வழங்க முடியும். பல நகராட்சிகள் புதிய குடியிருப்பாளர்களை வரவேற்பதற்கான ஒரு நிகழ்ச்சியை நடாத்துகின்றன. முதல் மனப் பதிவைப் பெற இது ஒரு சிறந்த வாய்ப்பாகும்.

கழகங்கள்

அப்பென்செல் அவசர்ஹோடன் மாநிலத்தில் அதிகமான குடியிருப்பாளர்கள் ஏதோ ஒரு கழகத்தில் (club) அங்கத்தவராயிருப்பார்கள்.பல வகைப்பட்ட ரசனைக்கேற்ப அதிக கழகங்கள் உள்ளன. சிறிய சமூகங்கள் கூட விளையாட்டு, கலாச்சார மற்றும் பிற கழகங்களைக் கொண்டுள்ளன. அவை மற்றவர்களுடன் இணைவதற்கு ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குகின்றன. பெரும்பாலான கழகங்களும் சங்கங்களும் அனைவருக்கும் திறந்திருக்கும். இந்தக் கழகங்களையும் சங்கங்களையும் பற்றிய தகவல்களை நகராட்சிகளின் வலைத்தளங்களில் காணலாம்.

இளையவர்களுக்கான வசதிகள்

அப்பென்செல் அவ்சர்ஹோடன் மாநிலத்திலுள்ள இளையவர்கள் தமது ஓய்வு நேரத்தைக் கழிக்கவும் தமது வயதையொத்தவர்களுடன் பழகிக் கொள்ளவும் எனப் பல விசேட வசதிகள் உள்ளன. அதிகமான மாநகராட்சிகளில் ஓய்வு நேரச் சலுகைகளுடன் கூடிய சந்திப்புக்கள் உள்ளன. இங்குள்ள இளையவர்களைப் பராமரித்து அவர்கள் எண்ணங்களைச் சேர்த்து செயற்திட்டமாக்குவார்கள் (youth work). இச் சலுகை வழக்கமாக இலவசமானது. இளைஞர் அமைப்புகளில் ஒரே வயதினர் சேர்ந்து தடகள இயற்கை விளையாட்டுக்களில் பங்கெடுப்பார்கள். இதைக் கழகங்கள் மாநகராட்சிகள் அல்லது தேவாலயங்கள் நடத்தலாம். இந்தச் சலுகைகள் அனைத்து இளையோருக்கும் உரியது. மேலதிக விபரங்களை அறிய மாநகராட்சிகளைத் தொடர்புகொள்ளலாம்.