துவிச்சக்கர வண்டியிலோ (Velo) அல்லது நடந்தோ வெளியே செல்லுதல்
Appenzell Ausserrhoden கிராமசபைகள் துவிச்சக்கர வண்டியோடிகளுக்கும் நடப்பவர்களுக்கும் கவர்ச்சியானதும் ஒப்பீட்டளவில் பாதுகாப்பானதுமாக உள்ளன. இதனால் குறுகிய தூரங்களுக்கு பலர் காரைப் பயன்படுத்துவதை தவிர்க்கின்றனர். அதிக இடங்களில் சிறப்பு துவிச்சக்கர வண்டிப் பாதைகளும் ஒற்றையடிப் பாதைகளும் உள்ளன. பாதசாரிகள் ஒவ்வொரு நேரத்திலும் மஞ்சள் கோடுகளால் குறிக்கப்பட்டுள்ள நடைபாதைகளில் வாகனங்களுக்கு முன்னுரிமை பெறுவார்கள் (வீதியைக் கடக்கும் போது சமிக்ஞை விளக்கு இல்லாவிடில்).
Appenzell Ausserrhoden பல அழகான நடைபாதைகளையும் மலையேறும் பாதைகளையும் வழங்குகிறது, அவை ஓய்வுநேரத்தில் ஆராய்வதற்குப் பயனுள்ளதாக இருக்கும். இந்த நடைபாதைகள் மஞ்சள் நிற வழிகாட்டி பலகைகளால் குறிக்கப்பட்டுள்ளன.