அங்கீகரிக்கப்படல்
வெளிநாட்டு பட்டம் உள்ளவர்கள் அவற்றை சுவிசில் அங்கீகரிக்கும்படி கோரலாம். இந்த அங்கீகரிப்பின் மூலம் வெளிநாட்டின் பட்டம் அல்லது பயிற்சி முடிவு சுவிசின் பட்டம் அல்லது படிப்பின் முடிவுடன் ஒரே தகமையில் உள்ளதெனப்படும். சில முறைமைப்படுத்தப்பட்ட தொழில்களுக்கு (பராமரிப்புதொழில், ஆசிரியர் போன்றன.) அத்தொழில்களை செய்வதற்கு இவ் அங்கீகாரம் முக்கியம். இவ் அங்கீகாரத்திற்கு அவற்றின் தொழில் மற்றும் பட்டப்படிப்பைப் பொறுத்து வௌ;வேறு நிலையங்கள் பெறுப்பானவை. ஓர் அங்கீகரித்தலானது கட்டணத்துக்குட்பட்டது. தகவல்கள் வழங்குகிறார்கள்:
- டிப்ளமா அங்கீகாரத்திற்கான தேசிய தொடர்பு மையம்
- துறைசார் அலுவலகம் Heks MosaiQ கிழக்கு சுவிட்சர்லாந்து
- தொழில், படிப்பு மற்றும் வேலைவாய்ப்பு ஆலோசனை