ஜேர்மனிய மொழி கற்றல்

ஜேர்மனிய மொழியைச் சரியாகப் படிக்க வேண்டுமானால் ஒரு ஜேர்மனிய மொழி வகுப்புக்குப் செல்லுமாறு பரிந்துரை செய்யப்படுகிறது. அப்பென்செல் அவ்செர்ஹோடன் மாநிலத்தில் ஜேர்மனிய மொழி வகுப்புகள் பல வகை வாழ்க்கைச் சூழ் நிலைகளுக்கும் ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளன.

சலுகைகள்

அப்பென்செல் அவ்சர்ஹோடன மாநிலமும் நகராட்சிகளும் ஜெர்மன் மொழி படிப்புகளுக்கான செலவுகளில் ஒரு பகுதியை செலுத்துகின்றன. இது பங்கேற்பாளர்களுக்கு பாடநெறிகளை மிகவும் மலிவானதாக ஆக்குகிறது.

அப்பென்செல் மத்திய பிராந்திய வயது வந்தோர் கல்விச் சங்கம் பெரியவர்களுக்கான ஜெர்மன் பாடநெறிகளை நடத்துகிறது. பாடநெறிகள் A1 முதல் B2 வரையிலான மொழி நிலைகளில் கிடைக்கின்றன. 

2 முதல் 4 வயதுக்குட்பட்ட குழந்தைகளைக் கொண்ட தாய்மார்கள், செயிண்ட் கேலனில் உள்ள Aida I Education + Encounter association இல் மலிவு விலையில் ஜெர்மன் மொழிப் பாடநெறிகளில் கலந்து கொள்ளலாம். தாய்மார்கள் கற்கும் அதே நேரத்தில் ​​குழந்தைகள் ஒரு தனியான குழந்தைகளுக்கான பாடநெறியில் பங்கேற்பார்கள். இந்த வழியில், குழந்தைகள் சிறு வயதிலேயே ஜெர்மன் மொழியைக் கற்றுக்கொள்கிறார்கள்.   

ஒருங்கிணைப்பு தகவல் மையம் (INFI) அல்லது உள்ளூர் நகராட்சி கிடைக்கக்கூடிய சேவைகள் பற்றிய தகவல்களை வழங்க முடியும்.

மொழியின் தரம்

டொச் மொழியறிவின் ஒரு அளவுகோலாக ஐரோப்பிய குறிப்புச்சட்டகங்கள்" (GER)என வகுக்கப்படும். இதில் 6 அடுத்தடுத்த மொழியின் நிலைகள் A1(ஆரம்பம்) தொடக்கம் C2 (மிகவும் திறமையான மொழியறிவு)வரை உள்ளன. அதிகமான டொச்மொழி வகுப்புகள் இந்தப் படிகளிலே அமைக்கப்பட்டுள்ளன. நிலை A1 உம் A2 உம் டொச்மொழியின் அடிப்படை அறிவைக்காட்டும். அங்கீகரிக்கப்பட்ட தொழிற்கல்வி கற்க முயற்சி செய்ய விரும்பினால் அதிகமாக நிலை B1 உம் B2 உம் படித்திருக்கவேண்டும். C1உம் C2 படித்து மேம்பட்டவர்கள் பல்கலைக் கழகங்களில் உயர்கல்வி கற்கலாம்.