தொழிற்கல்வி / துறைசார் பாடசாலைகள்

கட்டாயப்பாடசாலை முடிந்த பின்பு அதிகளவு இளையவர்கள் தொழில்கல்வி கற்கவே முடிவுசெய்கிறார்கள். எவர் உயர்கல்வி கற்க விரும்புகிறார்களோ அவர்கள் கட்டாயமாக ஒரு துறைசார் பாடசாலையில் ஒரு புலமைச்சித்தி பெற்றிருக்கவேண்டும். இதன் பின்பு தொழில்கல்வி கற்கவும் போகலாம்.

கல்வியின் அர்த்தம்

நல்ல கல்வியும் தொழில் வாழ்வில் நல்ல வேலையும் ஒரு உயர்ந்த அர்த்தத்தைக் கொடுக்கும். கட்டாயப்பாடசாலையில் கிடைத்த திறமைகள் தான் எதிர்கால வசதி வாய்ப்புகளுக்கு முக்கியமாகும். கட்டாயப்பாடசாலை முடித்த இளையவர்களுக்குப் பலவிதமான வழிகள் திறந்துள்ளன. தொழில், படிப்பு மற்றும் தொழில் ஆலோசனைகள் இளைஞர்கள் மற்றும் பெற்றோருக்கு கல்வி மற்றும் பயிற்சி தொடர்பான கேள்விகளில் இலவசமாக ஆலோசனை வழங்குகின்றன.

தொழில் அடிப்படைக்கல்வி

கட்டாயப்பாடசாலை முடிந்த பின்பு அதிகளவு இளையவர்கள் தொழில் அடிப்படைக் கல்வி (தொழில் பயிலுதல், Berufslehre) கற்கவே முடிவு செய்கிறார்கள். இளையவர்கள் தொழில் கற்கும் போது ஒரு நிறுவனத்தில் தொழில் செயன்முறையைப் பயிலுவது மட்டுமன்றி அதனுடன் சேர்ந்து தொழில் பாடசாலைக்கும் செல்வார்கள். தெரிவு செய்வதற்கு 250 க்கு மேற்பட்ட தொழில் துறைகள் உள்ளன. ஒரு தொழில்கல்வி பயில 2 -4 வருடங்கள் வரை எடுக்கும். இளையவர்கள் தாமாகவே தொழில் பயிலுமிடத்தை ஒரு நிறுவனத்தில் தேட வேண்டும். கட்டாயப் பாடசாலை வருடத்தில் கடைசி இரு வருடங்களும் தொழில் பயிலுமிடம் தேடுவதற்குரியது. இதற்குப் பாடசாலை உதவி செய்த போதும் பெற்றோரின் உதவியிலும் தங்கியுள்ளது. இளையவர்களுக்காகப் பலவித வசதி வாய்ப்புகளைக் காட்டுவது மட்டுமன்றி இலவச ஆலோசனையும் தருகிறது. தொழில் பயின்ற இளையவர்கள் தொழில்புலமைக்கு (Berufsmaturität) விண்ணப்பிக்கலாம். இதை தொழில் அடிப்படைக்கல்வி பயிலும்போதோ அன்றி முடிந்த பின்போ விண்ணப்பிக்கலாம்.

துறைசார் பாடசாலைகள்

துறைசார் பாடசாலைகள் (Mittelschulen) அகலமான பொது அறிவைத் தருகின்றன. அதே வேளை பரந்த கல்வியறிவையும் தந்து பல்கலைக்கழகம் அல்லது உயர்கல்விப்பாடசாலைக்குப் (Fachhochschulen) போக வழி செய்கிறது. யிம்நாசியம் போய் புலமையடைந்தவர்கள் (gymnasiale Maturität) தொழில் கற்றுப் புலமையடைந்தவர்கள் (Fach-oder Berufsmaturität). யிம்நாசியபுலமை முடித்தவர்கள் நேரடியாக பல்கலைக்கழகத்திற்குச் செல்ல தகுதி பெறுகிறார்கள். துறைசார் அல்லது தொழில்புலமை கல்வியானது நேரடியாக உயர்கல்விப்பாடசாலைக்கு செல்ல வழிவகுக்கிறது. உயர்கல்விப்பாடசாலையானது யிம்நாசியப்புலமை கற்றவர்களுக்கான வழிவகை ஏற்பாடு செய்வதுடன் பல்கலைக்கழகத்திற்கு துறைசார் அல்லது தொழில்புலமை மாணவர்களுக்கு (ஒரு பரீட்சை மூலம்) செல்லவும் வழிவகுக்கிறது. எவற்றை மேலதிகமாக செய்ய விரும்புகிறார்களோ அதற்கு மேலதிக நடைமுறையை பின்பற்ற வேண்டும்.

இணைப்புச்சலுகை

கட்டாய பள்ளி கல்விக்குப் பிறகு காந்தனில் நுழையும் இளம்வர்கள் குறிப்பிட்ட நிபந்தனைகளின் கீழ் ஒரு பாலவீதம் திட்டத்தில் பங்கேற்க முடியும். இந்த திட்டம் தொழில்நுட்ப சந்தையில் நுழைவிற்கு முக்கியமாக கவனம் செலுத்துகிறது. ஒரு பாலவீதம் திட்டம் இளைஞர்களை பயிற்சி அல்லது கற்கை நிலையை கண்டுபிடிக்க உதவுகிறது. ஆர்வமுள்ளவர்கள் ஹெரிசாவை (Brücken AR) தொழில்முறை கல்வி மையத்துடனோ, தொழில்முறை, படிப்பு மற்றும் வேலையில் ஆலோசனையை தொடர்புகொண்டு கொள்கின்றனர்.