பட்டப்படிப்பு அங்கீகாரம்.

வெளிநாட்டுப்பபட்டுப்படிப்பு மற்றும் இறுதி அறிக்கை எப்போதும் சுவிசில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. நிபந்தனைகளுக்குட்பட்டு இந்த பட்டப்படிப்பு சான்றிதளை அங்கீகரிக்கும்படி கோரலாம். ஒருசில தொழில்களுக்கு இவை நன்கு பிரயோசனப்படும்.

அங்கீகரிக்கப்படல்

வெளிநாட்டு பட்டம் உள்ளவர்கள் அவற்றை சுவிசில் அங்கீகரிக்கும்படி கோரலாம். இந்த அங்கீகரிப்பின் மூலம் வெளிநாட்டின் பட்டம் அல்லது பயிற்சி முடிவு சுவிசின் பட்டம் அல்லது படிப்பின் முடிவுடன் ஒரே தகமையில் உள்ளதெனப்படும். சில முறைமைப்படுத்தப்பட்ட தொழில்களுக்கு (பராமரிப்புதொழில், ஆசிரியர் போன்றன.) அத்தொழில்களை செய்வதற்கு இவ் அங்கீகாரம் முக்கியம். இவ் அங்கீகாரத்திற்கு அவற்றின் தொழில் மற்றும் பட்டப்படிப்பைப் பொறுத்து வௌ;வேறு நிலையங்கள் பெறுப்பானவை. ஓர் அங்கீகரித்தலானது கட்டணத்துக்குட்பட்டது. தகவல்களை கல்வி, ஆராய்ச்சி மற்றும் புதுமை தொடர்பான மாநில செயலாளர் அலுவலகம் மற்றும் Heks MosaiQ Ostschweiz நிபுணர் மையம் வழங்குகின்றன.

தரம் உறுதிசெய்தல்

முறைமைப்படுத்தப்படாத தொழில்களை சுவிசில் செய்வதற்கு பட்டப்படிப்பு அல்லது பரீட்சை முடிவுகள் அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டியதில்லை. இந்தத் தொழில்களுககாக ஒரு தரநிலை உறுதிசெய்தலிற்கு (Niveaubestätigung) வின்ணப்பிக்க வேண்டும். இது வெளிநாட்டு பட்டப்படிப்பின் பெறுமதியை சுவிசின் பயிற்சித்திட்டத்துடன் ஒப்பிடுகிறது. இவ் உறுதிப்படுத்தல் வேலைதேடுதலிற்கு உதவும். நிலைத் தகுதிப்பத்திரம் தொடர்பான தகவல்களை கல்வி, ஆராய்ச்சி மற்றும் புதுமைக்கான மாநில செயலாளர் அலுவலகம் அல்லது HEKS MosaiQ Ostschweiz நிபுணர் மையம் வழங்குகின்றன.

தொழிற்பயிற்சி முடிவை மீளச்செய்தல்.

தொழில் அனுபவம் , ஆனால் அங்கீகரிக்கப்பட்ட பட்டம் அல்லது படிப்பு முடிவு இல்லாதவர்கள் சுவிஸ் அடிப்படைத்தொழிற்கல்வி அல்லது உயர் தொழிற்கல்வியை படித்துமுடிக்கலாம். இந்நடைமுறை அவர் முன்பு செய்திருந்து படிப்பு, தொழில் அனுபவம் மற்றும் வயதில் தங்கியுள்ளது. எதுவாயினும் ஓரு நன்கு டொச் தெரிந்தநிலை (B1/B2 ஜேர்மன் தரம்) மிகமுக்கியமானது. விருப்பமுள்ளவர்கள் தொழில், படிப்பு மற்றும் வாழ்க்கைத்துறைக்கான ஆலோசனையிடம் தகவல்களைப் பெறலாம் மற்றும் ஆலோசனை பெறலாம். ஒரு தொழில்துறை தகுதியை பிந்தைய கட்டத்தில் முடிப்பவர்கள் வேலை சந்தையில் தங்கள் வாய்ப்புகளை மேம்படுத்தி, தொடர்ந்த கல்விக்கான அணுகலை பெறுகிறார்கள்.