அதிகூடிய அடிப்படைச்சட்டக் கொள்கைகள் சுவிஸின் கூட்டாட்சி அரசியலமைப்பில் (Bundesverfassung) உறுதி செய்யப்பட்டுள்ளது. கூட்டாட்சி அரசியலமைப்பின் ஒரு முக்கியமானதாக ஐரோப்பிய மனித உரிமைகள் தொடர்பான மாநாட்டில் (EMRK) எடுக்கப்பட்ட அடிப்படை உரிமைகள் அமைகின்றன. இவை மனிதனின் இருப்புகளைப் (உதாரணத்திற்கு வாழ்க்கைக்கான உரிமை, அவசர நிலையில் உதவிக்கான உரிமை) பாதுகாப்பதுடன் மற்றும் தனிப்பட்டவர்களுக்கெதிரான அரச வன்முறை அல்லது பெரும்பான்மையோருக்கு எதிரான குழுக்களின் வன்முறைகள் என்பவற்றிலிருந்து பாதுகாக்கிறது. எவருக்கும் அவர்களின் பிறப்பிடம், இனம், மதம், பாலினம் அல்லது பாலியல் போக்கிற்குப் பாரபட்சம் காட்டக்கூடாது என்பதை உத்தரவாதம் செய்கிறது .அபின்செல் ஆஸ்சர்ரோடென் மாநிலத்தில் இனப்பாகுபாட்டினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச ஆதரவு மற்றும் ஆலோசனை வழங்கப்படுகிறது. சுவிஸில் சமயம், கருத்து வெளியிடுதல், மற்றும் பத்திரிகைச் சுதந்திரம் உள்ளன.
வெறுப்புக்கோரி பாதிக்கப்படும் ஒருவர் "HEKS இனவாதம் மற்றும் வெறுப்புக்கு எதிரான ஆலோசனை மையம்" (HEKS Beratungsstelle gegen Rassismus und Diskriminierung) என்ற இடத்தை தொடர்பு கொள்ள முடியும்.
பணியாளர் சட்டம் மற்றும் சமத்துவ சட்டம் தொடர்பான கேள்விகளுக்கு, பெண்கள் மற்றும் ஆண்கள் 'வேலை' தகவல் நிலையத்தில் இலவச ஆலோசனையைப் பெற முடியும்.