► ஃபெடரலிசம்: சுவிட்சர்லாந்தில், பொறுப்புகள் கூட்டாட்சி அரசாங்கம், மாநிலங்கள் மற்றும் நகராட்சிகளுக்கு இடையே பகிரப்படுகின்றன. இதை "ஃபெடரலிசம்" (federalism) என்கிறார்கள். பள்ளிக்கல்வி, வரிகள் மற்றும் சமூக உதவிகள் போன்றவை ஒவ்வொரு மாநிலத்திலும் சிறிது மாறுபடுகின்றன. பழக்கவழக்கங்களும் மண்டலத்துக்கு ஏற்ப மாறுபடுகின்றன.
► ஜனநாயக உரிமை: சுவிட்சர்லாந்தில் 18 வயதிற்கு மேற்பட்ட சுவிஸ் குடிமக்களுக்கே வாக்களிக்கும் மற்றும் தேர்தலில் போட்டியிடும் உரிமை உண்டு. Trogen, Speicher, Wald மற்றும் Rehetobel (நகராட்சி வாக்களிக்கும் உரிமை) நகராட்சிகளில், சுவிட்சர்லாந்தில் குறைந்தது 10 வருடங்கள் மற்றும் அந்த மாநிலத்தில் 5 வருடங்கள் வசித்திருந்தால் விதிவிலக்கு உள்ளது.
► கோரிக்கைகள் (petition) உரிமை: அனைத்து வயதானவர்களும் – வெளிநாட்டு குடிமக்கள் உட்பட – நகராட்சி, மாநிலம் மற்றும் கூட்டாட்சி நிர்வாகங்களுக்கு கோரிக்கைகள் அனுப்பும் உரிமை பெற்றுள்ளனர். இவை பரிந்துரைகள், புகார்கள் அல்லது விண்ணப்பங்களை கொண்டிருக்கலாம்.
_________________________________________________________________________________________