உள்வாங்குதல் (ஒருங்கிணைப்பு)

வெளிநாட்டவர்கள் இங்குள்ள சமூகத்துடன் சேர்ந்து பழகி ஒருங்கிணைய வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அதில் சட்டங்களைக் கடைப்பிடித்தல், பொருளாதார ரீதியாகத் தன்னிறைவு அடைந்திருத்தல், ஜேர்மனிய மொழியைக் கற்றல் என்பன உள்ளடங்கும்.

முக்கிய கோட்பாடுகள்

சுவிஸின் குடியிருப்பாளர்கள் கட்டாயமாக அரசியலமைப்பைக் (உ+மாக ஆணுக்கும் பெண்ணுக்கும் சமவுரிமை) கவனத்தில் கொண்டு சட்டத்தை மதித்து நடக்க வேண்டும். அதைத்தவிர இயலுமானவரை பொருளாதார ரீதியாகத் தன்னிறைவடைய முயல வேண்டும். வெளிநாட்டிலிருந்து குடியேறியவர்கள் தாம் குடிபுகுந்த இடத்து மொழியைக் விரைவில் கற்க வேணடுமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஒருங்கிணைவு என்பது இரு பக்கத்தினரும் தம் பங்களிப்பைச் செய்தால் மட்டுமே வெற்றியளிக்கும். அதனாலேயே இந்நாட்டு மக்கள் வெளிநாட்டவர்களுடன் திறந்த மனதுடன் பழக வேண்டும் எதிர்பார்க்கப்படுகிறது.

தனிப்பட்ட பொறுப்புணர்வு

வெளிநாட்டவர்களுக்கு பொருளாதாரம், சமூக மற்றும் கலாச்சார வாழ்க்கைக்கு நியாயமான அணுகல் கிடைப்பதை கூட்டாட்சிய அரசாங்கமும், மாநிலங்களும், மாநகராட்சிகளும் உறுதிப்படுத்த வேண்டும்.வெளிநாட்டினர், தங்கள் சொந்த ஒருங்கிணைப்புக்குப் பொறுப்பேற்க வேண்டும் என்றறும் வழங்கப்படும் சேவைகளைப் பயன்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமூக வாழ்க்கையில் பங்கேற்றல்

சுவிஸ் சமுதாயத்துடன் ஒருங்கிணைவதற்கும் மனிதர்களைச் சந்திப்பதற்குமான ஒரு சிறந்த வழிமுறையாக கழகங்களும் சங்கங்களும் உள்ளன. உங்கள் சமூகத்தில் நடைபெறும் பண்டிகைகளும் நிகழ்ச்சிகளும் தொடர்புகளை ஏற்படுத்த சிறந்த வாய்ப்புகளாகும். தொடங்குவது சில நேரங்களில் கொஞ்சம் கடினமாக இருக்கலாம், ஏனெனில் அனைத்து சுவிஸ் குடியிருப்பாளர்களும் வெளிநாட்டு கலாச்சாரங்களைத் திறந்த மனதுடன் ஏற்றுக்கொள்வதில்லை. சில நேரங்களில் கொஞ்சம் விடாமுயற்சி தேவைப்படும்.

தகவல்கள் / உதவிகள்

அப்பென்செல் அவசர்ஹோடன் மாகாணத்தில், புதியவர்கள் பல்வேறு ஆதரவுச் சேவைகளைப் பெற முடியும். உள்ளூர் நகராட்சி எப்போதும் தொடர்பு கொள்ள ஒரு நல்ல முதல் புள்ளியாகும். இருப்பினும், புலம்பெயர்ந்தோருக்கான சிறப்பான ஆதரவுச் சேவைகளும் உள்ளன. ஒருங்கிணைப்பு தகவல் மையம் சுவிட்சர்லாந்தின் வாழ்க்கை பற்றிய தகவல்களை வழங்குவதுடன் பல்வேறு தலைப்புகளில் குறிப்பிட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கிறது. இன்னும் ஜெர்மன் பேசத் தெரியாதவர்கள் மொழிபெயர்க்க யாரையாவது அழைத்து வரலாம் அல்லது ஒரு மொழிபெயர்ப்பாளரைக் கோரலாம்.