பிள்ளைகளின் தினசரிப் பாடசாலை நாட்கள் மற்றும் அவர்கள் திறமைகள் பற்றியும் பெற்றோருக்கு அறியத்தருவது பாடசாலையின் பொறுப்பாகும். அதற்காகவே பெற்றோருடன் கலந்துரையாடல் (ஆசிரியர் பெற்றோருக்கிடையில்) பெற்றோர் மாலை (பாடசாலைத் தகவல்களைப் பெற்றோருக்கு அறியத்தருதல் ) மற்றும் தகவல் நிகழ்ச்சிகள் இடம்பெறும். அதிகமாக இவை எல்லாவற்றிற்கும் பெற்றோர் பங்குபற்ற வேண்டும். பிள்ளையை ஒழுங்காகப் பாடசாலைக்கு அனுப்புவதற்குப் பெற்றோரே பொறுப்பாகும். பிள்ளை பாடங்களுக்குச் சமூகமளிக்க முடியாவிடின் (உ+மாக நோய்) அது பற்றிப் பெற்றோரே அறிவிக்கவேண்டும்.
அவர்களின் குழந்தைகள் வீட்டுப்பாடங்களை செய்து முடிக்க வேண்டும் என்பதை பெற்றோர்கள் உறுதிப்படுத்த வேண்டும். பெற்றோர்கள் பள்ளிப் பாடங்கள் மற்றும் வீட்டுப்பாடங்களை தவறாமல் பார்த்து, ஆர்வம் காட்டினால், குழந்தைகளை சிறப்பாக உதவிக்கொடுக்க முடியும். சுவிஸ் கல்வி முறையை இன்னும் அறிந்துகொள்ளாதவர்களுக்காக சிறப்பு தகவல் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.