விவாகரத்து கணவன் மனைவி இருவருமாக இணைந்து அல்லது ஒருவர் மூலம் மட்டும் கோரப்படலாம். விவாகரத்துகள் நேரடியாக மாநில நீதிமன்றத்தில் தொடங்கலாம். வெளிநாட்டில் மணம் முடித்தவர்களும் சுவிஸ் சட்டப்படி இங்கு விவாகரத்துப் பெறலாம். இதற்கு சுவிசில் ஒரு ஏற்றுக்கொள்ளக்கூடிய வாழ்க்கைத்தராதரத்தில் குறைந்தது 1வருடமாவது வாழ்ந்திருக்க வேண்டும். விவாகரத்து, குடியிருப்பு நிலை அல்லது அப்போது நடைமுறையிலிருக்கும் பிராஜாவுரிமைகோரல் நடைமுறையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். விவாகரத்து பெற்ற வெளிநாட்டவர் சுவிசில் தொடர்ந்தும் வாழ்வதற்கு பலவிதமான நிபந்தனைக்கு உட்படவேண்டும். குடும்ப வன்முறையால்
விவாகரத்திற்கு குறித்த தகவல்களை பெற, திருமணம் மற்றும் குடும்ப ஆலோசனை மையத்தை தொடர்பு கொள்ளலாம். Beratungsstelle für Familien வாழ்க்கையின் கடினமான சூழ்நிலைகளில், சட்ட மற்றும் சமூக பிரச்சனைகளில் தகவல், ஆலோசனை மற்றும் ஆதரவளிக்கிறது. இந்த சேவை குடும்பங்கள், ஜோடிகள் மற்றும் தனிநபர்களுக்காகவும் வழங்கப்படுகிறது மற்றும் மானியம் பெறுகிறது.