ஓய்வு நேரம்

அப்பன்செல் அவ்சர்ஹோடன் மாநிலத்தில் ஓய்வு நேரத்தை களிப்பதற்கு பல கவர்ச்சியான வசதிகள் உள்ளன. இதில் முக்கியமானவை கழகங்களாகும். இவை வேறு மனிதர்களை அறிந்துகொள்ள சந்தர்ப்பங்களை வழங்குகின்றன.

கழகங்கள்

அப்பன்செல் அவ்சர்ஹோடன் மாநிலத்தில் அதிகமான குடியிருப்பாளர்கள் ஏதோ ஒரு கழகத்தில் (Verein) அங்கத்தவராயிருப்பார்கள். பல வகைப்பட்ட ரசனைக்கேற்ப அதிக கழகங்கள் உள்ளன. சிறிய கிராமசபைகளில் கூட விளையாட்டு, கலாச்சாரம் மேலும் பல கழகங்கள் உள்ளன. அவை மனிதர் ஒருவரோடொருவர் தொடர்பு கொள்ள சிறந்த சந்தர்ப்பங்களை ஏற்படுத்துகின்றன. அதிகமான கழகங்கள் அனைத்து மக்களுக்காகவும் திறந்துள்ளன. கழகங்கள் பற்றிய தகவல்களை கிராமசபைகளின் இணையத்தளங்களில் தேடலாம்.

இளையவர்களுக்கான வசதிகள்

காந்தோனிலுள்ள இளையவர்கள் தமது ஓய்வு நேரத்தைக் கழிக்கவும் தமது வயதையொத்தவர்களுடன் பழகிக் கொள்ளவும் எனப் பல விசேட வசதிகள் உள்ளன. அதிகமான கிராமசபைகளில் ஓய்வு நேரச் சலுகைகளுடன் கூடிய சந்திப்புக்கள் உள்ளன. இங்குள்ள இளையவர்களைப் பராமரித்து அவர்கள் எண்ணங்களைச் சேர்த்து செயற்திட்டமாக்குவார்கள் (Jugendarbeit). இச் சலுகை வழக்கமாக இலவசமானது. இளைஞர் அமைப்புகளில் ஒரே வயதினர் சேர்ந்து தடகள இயற்கை விளையாட்டுக்களில் பங்கெடுப்பார்கள். இதைக் கழகங்கள், கிராமசபைகள் அல்லது தேவாலயங்கள் நடத்தலாம். இந்த சலுகைகள் அனைத்து இளையோருக்கும் உரியது. வதியும் கிராமசபைகளில் மேலதிக விபரங்களை அறியலாம்.

சுற்றுலாவும் கலாச்சாரமும்.

காந்தோன் பல சுற்றுலா வாய்ப்புகளையும் செறிவான கலாச்சார நிகழ்ச்சிகளையும் வழங்குகிறது. பல அழகிய நடைபயணம் மற்றும் மிதிவண்டி வழித்தடங்கள் உள்ளன. பல அருங்காட்சியகங்கள் பல்வேறு தலைப்புகளில் கண்காட்சிகளை வழங்குகின்றன. அப்பன்செல் சுற்றுலா அமைப்பு சுற்றுலா வாய்ப்புகள் மற்றும் நிகழ்வுகளைப் பற்றிய தகவல்களை வழங்குகிறது. தற்போதைய கலாச்சார நிகழ்வுகள் பற்றிய தகவல்கள் உள்ளூர் நாளிதழ்களிலும் கிடைக்கும்.

விரும்பிவேலைசெய்தல்

தன்னார்வ சேவை என்பது பிறரை மற்றும் சுற்றுச்சூழலை 향ித்துள்ள சமூகப் பங்களிப்பு ஆகும், இது சம்பளமில்லாதது. சுவிட்சர்லாந்தில் பல பொறுப்புகள் பாரம்பரியமாக தன்னார்வத்தினரால் நிறைவேற்றப்படுகின்றன. இந்நிகழ்வுகளில் பெரும்பாலானவை கழகங்களில் நடைபெறுகின்றன. கலாச்சாரம், விளையாட்டு, சமூக விஷயங்கள், கல்வி, விலங்கு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பிற துறைகளில் தன்னார்வமாக ஈடுபடலாம். தன்னார்வச் சேவை மற்றும் ஈடுபாட்டு வாய்ப்புகள் குறித்து Benevol என்ற சிறப்பு மையம் தகவல்களை வழங்குகிறது.